வீட்டின் முன் கார் நிறுத்துவதில் தகராறு: முதியோர் அடித்து கொலை

தன் வீட்டின் முன் கார் நிறுத்தக்கடாது என தட்டிக்கேட்ட முதியவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் முதியவரை அடித்து கொலை.

Update: 2022-02-07 01:15 GMT

கார் நிறுத்தும் தகராறில் அடித்து காெலை செய்யப்பட்ட முதியவர் பரதராமர்.

தன் வீட்டின் முன் கார் நிறுத்தக்கடாது என தட்டிக்கேட்ட முதியவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் முதியவரை அடித்து கொலை

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட புழல், சிவராஜ் 3வது தெருவை சேர்ந்தவர் பரதராமர் (62). இவர் சென்னை பாரிமுனையில் ஒரு தனியார் மருந்தகம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் குமரன் (48), இவர் சொந்தமாக கார் ஓட்டி வருகிறார். கடந்த 1ம் தேதி குமரன் வீட்டு அருகே உள்ள பரதராமர் வீட்டு முன்பு குமரன் தனது காரை நிறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பரதராமர், காரை அங்கிருந்து எடுக்கும்படி குமரனிடம் கூறியிருந்தாராம். இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், வாக்குவாதம் முற்றியதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரன், அவரது தாய் மலர், மனைவி ரேவதி, உறவினர்கள் அருணகிரி, பழனி, சங்கீதா ஆகிய 6 பேர் சேர்ந்து, பரதராமரை உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததைக் கண்ட 6 பேரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவு ஆகியுள்ளார். இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்து கிடந்த, பரதராமரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரதராமர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்த புழல் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. இதுகுறித்து, கொலை வழக்குப்பதிவு செய்து, குமரனை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். சம்பவத்திற்கு காரணமாகி தலைமறைவான குமரன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News