பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் புனித புத்தர் ஆலயத்தில் புத்த பூர்ணிமா விழா நடைபெற்றது.;
செங்குன்றம் அருகே பாடியநல்லூர் புனித புத்தர் ஆலயத்தில் புத்த பூர்ணிமா விழா முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூரில் உள்ள புனித புத்தர் ஆலயத்தில் இந்தோ பர்மா புத்தர் ஆலயம் மற்றும் கலாச்சாரம் சார்பில் புனித புத்தர் பூர்ணிமா விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிக்குக்கள் கலந்துகொண்டு பௌத்த கொடியினை ஏற்றி வைத்து பஞ்சசீலம் கொள்கைகள் ஏற்றப்பட்டு புனித புத்தர்க்கு பூர்ணிமா சிறப்பு பூஜைகள் செய்து பௌத்த வேதங்களை பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர்.பின்னர் பெண்கள் பூ, பழங்கள் கொண்ட சீர்வரிசை தட்டுடன் ஆலய போதி மரத்தினை சுற்றி வந்து நீர் ஊற்றி புத்தரை வழிப்பட்டனர்.
இதில் இந்தோ பர்மா புத்தர் கோயில் நிர்வாகிகள் தலைவர் சேகர், செயலாளர் குமார், பொருலாளர் பாஸ்கர், துணைத்தலைவர் விஸ்வநாதன், துணை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பாடியநல்லூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புத்தமதத்தினர்கள் கலந்துகொண்டு புத்தரை வழிப்பட்டனர்.முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினர்.