வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை காெள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன் நகரில் வீடுபுகுந்து 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை. மர்மநபர்கள் கைவரிசை.;

Update: 2022-06-10 10:00 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன் நகர் சிவகாமி அம்மையார் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 38).இவர் காரனோடை பகுதியில் மோட்டார் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் மேல் வீட்டில் குடியிருந்த கிருபாகரனின் தாயார் உலகரசி கீழே வந்து பார்த்த போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பிரபாகரனுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக பிரபாகரன் வந்து வீட்டை பார்த்துவிட்டு பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News