பாடியநல்லூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இரத்த தான முகாம்

பாடியநல்லூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இரத்த தான முகாம் நடைபெற்றது.

Update: 2023-03-19 09:52 GMT

இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த மாபெரும் இரத்ததான முகாமை சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் தொடங்கி வைத்தார்.

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக பொதுக்கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை   சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே. கர்ணாகரன் தலைமையில் சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்து, இரத்தம்தானம் செய்த 200.க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள், உணவும், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வசேகரன், சோழவரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஏ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர்கள் கே.எம். துரைவேல், ப.சீனிவாசன், கே.வீரம்மாள், பொருளாளர் செ.அரசு, மாவட்ட பிரதிநிதிகள் இரா.விஜயன், பா.சேகர், பொன்.கோதண்டன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நா.பரசுராமன், ஒன்றியக் கவுன்சிலர்கள், சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி, மாணவரணி, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, மகளிரணி, கிளை கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News