காரனோடையில் இரத்ததான முகாம்
காரனோடையில் லயன்ஸ் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.;
சோழவரம் அருகே காரனோடையில் லயன்ஸ் சங்கம் சார்பில் இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் காரனோடை வட்டார நாடார் ஐக்கிய சங்கம், மெல்வின் ஜோன்ஸ் இரத்த வங்கி, சென்னை காரனோடை லயன்ஸ் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் காரனோடை கேபிகே திருமண மாளிகையில் சங்கத் தலைவர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுரேஷ், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு324 ஜெ மாவட்ட ஆளுநர் ரவிச்சந்திரன்,முன்னாள் ஆளுநர் ரவீந்திரன், இரண்டாம் துணை ஆளுநர் நரசிம்மன் ஆகியோர் இரத்ததான முகாமை துவக்கி வைத்து சான்றிதழ்கள் வழங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். முன்னதாக காந்தி, காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதில் வட்டாரத் தலைவர் சி.ரெஜிகுமார், மாவட்ட நிர்வாகிகள் ராஜு, கோபாலன், ரவிக்குமார், கருப்பசாமி, மாவட்டத் தலைவர்கள் சங்கர், ரவிதாஸ், அலெக்ஸ் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.