அலமாதியில் ஐயப்ப சுவாமி மலர் பூஜை
அலமாதி ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி மலர் பூஜை நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சி நேதாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் 3-ம் ஆண்டு தர்மசாஸ்தா ஐயப்பன் மலர் பூஜை ஆலய ஸ்தாபகர் முரளி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கணபதி ஹோமத்துடன் மூலவர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது, தேன், திருநீர், பன்னீர் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் குருசாமி எம்.ஜி.ஆர்.குமரேசன் தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவருக்கு வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பக்தி பாடகரும் பூசாரியுமான ஜெயக்குமார் மற்றும் கெங்கையம்மன் குழுவினர்கள் சிவன், பெருமாள், விநாயகர், முருகர், அம்மன், ஐயப்பன் போன்ற தெய்வங்களில் ஆன்மீக பாடல்களை பாடி தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மலர் பூஜைகள் செய்து துப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஆலய நிர்வாகிகள் தினகரன், கோபி, மோகன்குமார், விநாயகமூர்த்தி, ஆனந்தபாபு, அருஞ்சுனைமுத்து, தனசேகரன், வேணுகோபால், சிவசக்தியன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார ஐயப்பன் பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்