இரத்த சேகரிப்பு செய்தமைக்காக சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்திற்கு விருது
பொதுமக்களிடமிருந்து இரத்ததானம் பெற்றுக் கொடுத்தமைக்காக மெல்வின் ஜோன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் - தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கம் சார்பில் இருதய பரிசோதனை, கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம், மெல்வின் ஜோன்ஸ் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாம்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் துவக்கி வைத்திருந்தனர். இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்து பொதுமக்களிடமிருந்து இரத்ததானம் பெற்றுக் கொடுத்தமைக்காக மெல்வின் ஜோன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாவட்ட ஆளுநர் ரவீந்திரன், முதல் நிலை ஆளுநர் கஜேந்திரபாபு, இரண்டாம் நிலை ஆளுநர் ரவிச்சந்திரன், கூட்டு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதரன், மாவட்டச் செயலாளர் பாபு, பொருளாளர் சரவணன், மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகளிடமிருந்து சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் அன்சர் ஃபாத்திமா, செயலாளர் முகம்மது யூசுப், பொருளாளர் பயாஸ் உசேன், வட்டாரத் தலைவர் நண்பன் முகம்மது அபுபக்கர் ஆகியோர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் இந்த ஆண்டில் மக்கள் சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.