துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி: மாதவரத்தில் பரபரப்பு

மாதவரத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவர் தனது அதிகாரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-05-14 01:45 GMT

மேலாளரை காெல்ல முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்ட அசோக்குமார்.

மாதவரத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவர் வேலை இழந்த காரணத்தினால் தனது அதிகாரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை எழும்பூரை சேர்ந்த அசோக்குமார் (53) இவர் மாதவரம் மண்டலம் 3 ல் ஒப்பந்த தொழிலாளராக துப்புரவு பணி செய்து வருகிறார். இதே மாதவரம் மண்டலத்தில் துப்புரவு பணி மேலாளராக பாஸ்கரன் (32) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் தினமும் மது அருந்திவிட்டு வேலை செய்யாமலும் இரவுபணியின் போது தூங்கிவிடுவதாகவும் இதனால் சரிவர வேலை செய்யாத காரணத்தால் மேலாளர் பாஸ்கரன் அவருடைய மேல்அதிகாரியிடம் இதுகுறித்து தெரிவித்து வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.

வேலை இழந்த அசோக்குமார் மறுபடியும் குடித்து விட்டு மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே வந்து அங்கே வந்திருந்த மேலதிகாரி பாஸ்கரனை பழிவாங்க தான் தயாராக வைத்திருந்த பெட்ரோலை அவர்மீது ஊற்றி தீவைத்து கொளுத்த முயற்சி செய்யும் போது உடனை அங்கிருந்த மற்ற துப்புரவு தொழிலாளர்கள் உடனே மேலாளரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காப்பாற்றினர். இச்சம்பவம் குறித்து பாஸ்கரன் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த அசோக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News