ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் மனைவி கைது
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி தமது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 23 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்ந நிலையில் நேற்று தனிப்படை போலீசார் ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை சுற்றிவளைத்து சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொலை வழக்கில் பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று அவரை முறைப்படி கைது செய்த செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
செப் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.