செங்குன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posters On Drugs Awareness - செங்குன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-27 03:30 GMT

செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணன் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டிய காட்சி.

Posters On Drugs Awareness -ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் செங்குன்றம் கூட்டு சாலை சந்திப்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணன் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டி, துண்டு பிரசங்கங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் முருகேசன், செங்குன்றம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ், குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி, செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் உட்பட உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு போதை இல்லா தமிழகம் உருவாக்கிட வாகன ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News