காரனோடையில் அண்ணா பிறந்தநாள் விழா அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

காரனோடையில் நடநத அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி பங்கேற்று பேசினார்.;

Update: 2023-09-17 10:28 GMT

காரனோடையில் நடந்த அ.தி.மு.க. அண்ணாபிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி பேசினார்.

சோழவரம் அருகே  காரனோடையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அண்ணாபிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்து கல்வி வளர்ச்சியை தந்தார்.ஆனால் திமுக அரசு மாணவர்களுக்கு கஞ்சாவை கொடுத்து அவர்களை சீரழிக்கிறது என முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி கடுமையாக தாக்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் அருகே காரனோடையில் அ.தி.மு.க .சார்பில்  அண்ணா 115- ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் மதுரை மாநாடு தீர்மான விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி பங்கேற்றார்.அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் அட்டூழியம், அராஜகம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு அன்றாட நிகழ்வாகி விட்டது.கொலை நடக்காத நாளே கிடையாது.அது மட்டுமா, பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் இருந்தபோது அரசு பள்ளியில் படிக்கின்ற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை கொடுத்து கல்வி வளர்ச்சியை தந்தார்.ஆனால் தி.மு.க. அரசு மாணவர்களுக்கு கஞ்சாவை கொடுத்து அவர்களை சீரழிக்கிறது. மேலும் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகமாக காணப்பட்டு வருவது சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது என குற்றம் சாட்டினார்.  இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி வேணுகோபால்,மற்றும் மாவட்டம், ஒன்றியம் கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News