நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

நடிகர் சூரி தனது மனைவியுடன் வாக்களிக்க வந்தபோது தனது வாக்கு இல்லை என்று ஏமாற்றுத்துடன் திரும்பினார்.;

Update: 2024-04-19 12:15 GMT

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு தனது மனைவியுடன் வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் வாக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சி.

ஜனநாயக கடமையை ஆற்ற வந்த தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் அடுத்த முறை நிச்சயம் வாக்களிப்பேன் என சூரி கருத்து.

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வாக்களிக்க வந்த நிலையில், மனைவி மட்டும் வாக்களித்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பினார் சூரி. தற்போது அவர் பேசுவேன் ஒவ்வொரு தேர்தலின் போது சரியான முறையில் எங்கு இருந்தாலும் வந்து வாக்கு செலுத்தி சென்றேன் என்றும் ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் தனது பெயர் விடுபட்ட போனதாகவும் அதனால் வாக்கு செலுத்த முடியாமல் திரும்பி செல்வதாகவும், இனி ஒரு காலங்களில் அது போன்று இல்லாமல் விடுபட்டுப் போன தனது பெயரை பட்டியலில் மீண்டும் சரி பார்த்துக் கொண்டு அடுத்து வரும் தேர்தலில் நிச்சயமாக வாக்கு செலுத்துவேன் என்றும் எனவே அனைத்து மக்கள் 100 சதவீதம் தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News