கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது
சென்னை வளசரவாக்கத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
செந்தில்குமார்
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார்( வயது 42), போரூர் பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி செந்தில்குமார் அணிந்திருந்த மோதிரம் மற்றும் செல்போனை பறித்தி சென்றார்
இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் காரம்பாக்கத்தை சேர்ந்த அபினாஷ்( வயது 19) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோதிரம், செல்போன், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.