பள்ளியில் விளையாட்டு தின கண்காட்சி

செங்குன்றம் ஆயிஷா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விளையாட்டு தின கண்காட்சி நடைபெற்றது.;

Update: 2024-09-02 09:45 GMT

கண்காட்சியில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்ட புகைப்படம்.

செங்குன்றம் ஆயிஷா மெட்ரிக்குலேஷன் தனியார் பள்ளியில் விளையாட்டு தின கண்காட்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் இயங்கிவரும் ஆயிஷா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அகில இந்திய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு விளையாட்டு தொடர்பான கண்காட்சி பள்ளி முதல்வர் கௌரி தேவி தலைமையில் நடைபெற்றது. ஆயிஷா மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளரும் மஸ்ஜிதே ஆயிஷா தலைமை இமாமுமான முனைவர் மௌலவி காஜாமொய்னுத்தீன் ஜமாலி அனைவரையும் வரவேற்றார்.

மஸ்ஜிதே ஆயிஷா தலைவர் காஜா மொய்தீன், செயலாளர் அப்துல்லத்தீப், பொருளாளர் முகம்மதுஆஷிக்அலி, துணைத்தலைவர் ஹாபிழ் அக்பர் பாஷா, துணைச்செயலாளர் நாகூர் அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்த உபகரணங்கள், பொருட்கள் அனைவரின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக சைக்கிள், வாடிவாசல், பல்வேறு விளையாட்டு தொடர்பான விவரங்கள் அனைவர் மனதையும் கவர்ந்தது.இதில் மஸ்ஜிதே ஆயிஷா நிர்வாககுழு உறுப்பினர்கள் ஜாகீர்உசேன், சேட்டு, அப்துல்வாஹித், ஷாநவாஸ், சாகுல், அமீது, கலீல்ரஹ்மான் உள்ளிட்ட மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Similar News