செங்குன்றத்தில் குடிநீர் பாட்டிலில் கிடந்த கரப்பான் பூச்சி
செங்குன்றத்தில் குடிநீர் பாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்ததால், வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.;
செங்குன்றத்தில் பாட்டில் குடிநீரை வாங்கி குடிக்க முயன்றபோது பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர். அதிர்ச்சியடைந்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் கரிக்கோல்ராஜ் என்பவர் அங்கிருந்த கடை ஒன்றில் தாகத்திற்கு 20 ரூபாய் கொடுத்து அடைக்கப்பட்ட பாட்டில் குடிநீரை வாங்கி குடிக்க முயன்றுள்ளார். தனியார் நிறுவனத்தின் பெயர் கொண்ட அடைக்கப்பட்ட பாட்டில் குடிநீரில் கரப்பான் பூச்சி ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மக்களை உயிரை பாதுகாக்கும் வகையில் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பூச்சி இறந்த நிலையில் குடிநீர் பாட்டிலில் இருக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முறையான தரத்தில் தண்ணீர் பாட்டில் தயார் செய்யாத போலி நிறுவனங்களை, அதிகாரிகள் கண்டறிந்து ஆய்வு செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.