புழல் அருகே காகத்தை அகற்ற முயன்ற 3 இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

புழல் அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் இறந்த காகத்தை அகற்ற முயன்ற இளைஞர் மின்சாரம் பாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2024-09-24 03:30 GMT

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞர் டேவிட் ஜெயராஜ்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த புழல் விநாயகபுரம் வி.எம்.கே நகரை சேர்ந்தவர் டேவிட் ஜெயராஜ் (28) இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை இவரது வீட்டின் அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் காகம் ஒன்று இறந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதனை கண்ட ஜெயராஜ் தனது வீட்டின் மேல் மாடிக்கு சென்று வீடு துடைக்கும் கம்பியை கொண்டு காகத்தை அகற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

ஜெயராஜின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News