சென்னை செங்குன்றத்தில் 15 வயது சிறுவன் குத்திக் கொலை
சென்னை செங்குன்றத்தில் 15 வயது சிறுவன் குத்திக் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கொலையான நாகராஜ்.
சென்னை செங்குன்றம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் புழல் ஏரிக்கரையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் இளைஞர் ஒருவர் குடல் சரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே செங்குன்றம் நேதாஜி தெருவைச் சேர்ந்த 15வயது சிறுவன் நாகராஜ் என தெரியவந்தது.
15வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.