திருச்சி மாவட்டத்தில் வாஸ்அவுட் ஆகிறதா அதிமுக

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வாஸ்அவுட் ஆனது அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.;

Update: 2021-05-02 06:45 GMT

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், லால்குடி ஆகிய 8 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும், கே.என்.நேரு, இனிகோ இருதயராஜ், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, பழனியாண்டி, அப்துல்சமது, காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்திரபாண்டியன், கதிரவன் ஆகியோர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் அதிமுக திருச்சி மாவட்டத்தில் போட்டியி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்து, வாஸ்அவுட் ஆகிறது, ஏற்கனவே திமுகவிடம் உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய சேர்மன் பதவிகளையும் இழந்தது என்பது குறிப்பிட தக்கது,

Tags:    

Similar News