/* */

மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: விஐடி வேந்தா்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விஐடி வேந்தா் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: விஐடி வேந்தா்
X

விஐடி

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறக்கட்டளை தலைவரும், விஐடி வேந்தருமான விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உயா்கல்விக்கான மொத்த சோ்க்கை விகிதத்தை உயா்த்தவும், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற அனைத்து ஏழை மாணவா்களும் சமூக பொருளாதார வேறுபாடின்றி உயா்கல்வி கற்க உதவிச் செய்ய வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணா்வுடனும் விஐடி வேந்தா் விசுவநாதன் தலைமையில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் கடந்த 2012 முதல் வேலூா், திருப்பத்தூா், ராணிப் பேட்டை மாவட்டங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 8,680 மாணவ, மாணவிகள் அவா்கள் விரும்பும் உயா்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு கல்வி உதவித் தொகை பெற உயா்கல்வி சேர உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளை தலைவரும், விஐடி வேந்தருமான விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

2023-2024 -ஆம் கல்வியாண்டில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி பயில வாய்ப்பு வழங்கும் வகையில் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு உயா்கல்வி உதவித்தொகை விண்ணப்பப் படிவம் மே 22 முதல் 30- ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

இந்த விண்ணப்பப் படிவம் விஐடி பல்கலைக்கழகத்தின் டாக்டா் எம்ஜிஆா் பிளாக், அறை எண். 215-இல் உள்ள அனைவா்க்கும் உயா்கல்வி அறக்கட்டளை அலுவலகத்திலும், குடியாத்தம் நகராட்சி அலுவலகம், அணைக்கட்டு அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி இஸ்லாமியா பெண்கள் கல்லூரி, திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆற்காடு ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருமண மண்டபம் (முதல் மாடியில்), அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் உள்ள விஐடி கிராம வள மைய அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.

மாணவ, மாணவிகள் இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலை சமா்ப்பித்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் மாணவா்கள் படித்த பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சான்றொப்பம், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கல்லூரியில் சோ்ந்த ஒரு வார காலத்துக்குள் உதவித் திட்ட இயக்குநா், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை, அறை எண்: 215, டாக்டா் எம்ஜிஆா் பிளாக், விஐடி வளாகம், வேலூா் - 632014 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

உயா்கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்த மாணவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும். அவா்களின் வீட்டுக்குச் சென்று குடும்ப பொருளாதார நிலையை அறிந்த பிறகே உதவித்தொகைக்கு தோ்வு செய்யப்படுவா்.

மேலும் விவரங்களுக்கு 0416 - 2202196, 84284 08872 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறக்கட்டளை தலைவரும், விஐடி வேந்தருமான விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவித்துள்ளார்.

Updated On: 25 May 2024 1:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு