திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்

திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்

மைய நூலகத்தில் நடைபெற்ற வாசகர் வட்ட கூட்டம்.

திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்பு கூட்டம் நூல்கள் ஆய்வு அரங்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்பு கூட்டமும், சிந்தனைச் சாரல் என்ற தலைப்பில் நூல்கள் ஆய்வரங்கமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணைத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

ராஜாளி பார்வையிலே இமையத்திற்கு அப்பால் என்ற நூலை மூத்த வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் பழனி ராஜ் நூல் ஆய்வு செய்து பேசினார். நூல் ஆசிரியர் சுப்பிரமணியன் ஏற்புரையாற்றினார்.

விழாவில் காந்தி பேரவை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விஜயகுமார், மாவட்ட மைய நூலகர் சாயிராம், பாவலர் வேலாயுதம், புலவர் கோவிந்தசாமி மற்றும் தமிழ் ஆசிரியர்கள், பாடகர் மோகன், வாசகர் வட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலக சான்றோர் சங்கம் நடத்திய முப்பெரும் விழா

திருவண்ணாமலையில் உலக சான்றோர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நேற்று மாலை திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு தொழிலதிபர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தமிழ் செம்மல் இந்திரராசன் முன்னிலை வகித்தார். அனைவரையும் நந்தினி பதிப்பகம் எழுத்தாளர் சண்முகம் வரவேற்றார். சுவாமி விவேகானந்தர். சகோதரி நிவேதிதா வாழ்க்கையிலே எழுத்தாளா் சண்முகம் எழுதிய நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் வெளியிட சுந்தரராஜன். பேங்க் ஆப் பரோடா முதன்மை மேலாளர் வபச்சையப்பன் முனைவர் பிரசன்னா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

தொடர்ந்து பேராசிரியர் பாக்கியலட்சுமி எழுதிய சைவ எல்லப்ப நாவலரின் அருணாசல புராணம் என்கிற நூலை மாதவ சின்ராசு வெளியிட இந்த நூலை மாலா சந்திரசேகர் முனைவர் செந்தில் வேலன், முனைவர் அரங்க மணிமாறன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்..

விழாவில், பேராசிரியா் பச்சையம்மாள், சுப்பிரமணியன், நந்தகுமாா், சுப்பிரமணியன், நல்லாசிரியா் அல்லி, சுவாமி விவேகானந்தா மிஷன் ஜெயப்பிரகாஷ், பட்டிமன்ற பேச்சாளா் தேவிகாராணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பான சாதனை செய்த கவிப்பித்தன் மணிகண்டன் உள்ளிட்ட பலருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் கவிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Read MoreRead Less
Next Story