/* */

சவுக்கு சங்கரை கைது செய்தது சரியே: டிடிவி தினகரன்

சவுக்கு சங்கரை கைது செய்தது சரியான நடவடிக்கைதான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சவுக்கு சங்கரை கைது செய்தது சரியே:  டிடிவி தினகரன்
X

அருணாச்சலேஸ்வரர் கோயில் சுவாமி தரிசனம் செய்த டிடிவி தினகரன்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தாா்.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகா் சந்நிதி, அருணாசலேஸ்வரா் சந்நிதி, உண்ணாமுலையம்மன், நவகிரக சந்நிதிகளில் அவா் தரிசனம் செய்தாா்.

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தேனி மக்களவைத் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சவுக்கு சங்கர் தமிழக முதலமைச்சர் பற்றியும், காவல்துறை உயர் அதிகாரிகள் பெண் காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர்கள் உள்ளிட்ட பலரையும் தரக்குறைவாக பேசி இருப்பது அனைவரையும் வருத்தமடைய செய்தது.

தமிழக அரசு சவுக்கு சங்கரை கைது செய்தது தவறு இல்லை, இதுவே அனைவருடைய கருத்தாகவும் உள்ளது.

மேலும் தமிழக அரசு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போதை கலாச்சாரம் அதிகமாக உள்ளது. போதை பொருட்கள் கடத்துவது அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும் என கூறினார்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன் அவருடைய வீட்டில் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அண்ணாமலையார் கோயிலில் வந்து சாமி தரிசனம் செய்த பிறகுதான் அனைத்து வேலைகளும் தொடங்குவார்.

தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வந்து அருணாச்சலேஸ்வரர் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்த பிறகு தான் வேட்பு மனு தாக்கல் செய்தார் .

வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நேற்று டிடிவி தினகரன் அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 May 2024 1:27 AM GMT

Related News