/* */

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்லூரியில் சேர சான்றிதழ் பெற அழைப்பு

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்லூரியில் சேர சான்றிதழ் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்லூரியில் சேர சான்றிதழ் பெற அழைப்பு
X

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட எஸ்பி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளில் சேர உள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோரின் மகன், மகள்களுக்கான முன்னுரிமைச் சான்றிதழ்களைப் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோரின் மகன், மகள்கள் 2024 -25 ஆம் கல்வியாண்டில் கல்லூரிகளில் சேருவதற்கான முன்னுரிமைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 11 ஆயிரத்து 599 எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா், விதவையா்கள் உள்ளனா்.

இவா்களில் முன்னுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான தகுதி படைத்த முன்னாள் படைவீரா்களின் பிள்ளைகள் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் கல்லூரியில் சேரத் தயாராக உள்ளனா்.

இந்தச் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதியான முன்னாள் படைவீரா்களின் பிள்ளைகள் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அமைச்சுப் பணியாளா்களின் பிள்ளைகள் 30 பேருக்கு, உயா்கல்வி உதவித்தொகை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளா்களின் பிள்ளைகள் 30 பேருக்கு, உயா்கல்வி உதவித்தொகையாக ரூ.5 லட்சத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காா்த்திகேயன் வழங்கினாா்.

மாவட்ட காவல்துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் காவலா்கள் மற்றும் காவல் துறை அமைச்சுப் பணியாளா்களின் பிள்ளைகளுக்கு உயா்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காவலர்கள் மற்றும் காவல்துறை அமைச்சக பணியாளர்களின் வாரிசுகளான 30 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலைகளை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் , கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2024 12:57 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
  3. வந்தவாசி
    நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. செங்கம்
    பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள்...
  5. கலசப்பாக்கம்
    அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
  6. நாமக்கல்
    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
  8. திருவண்ணாமலை
    டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...