அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு

நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி

நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 18-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும், என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு 18.06.24 அன்று துவங்க இருக்கிறது. முதற்கட்ட கலந்தாய்வில் 5 துறைகளையும் சேர்த்து 98 சீட்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 202 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன. இதில் சிவில் பாடப் பிரிவில் 52 சீட்டுகளும் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 10 சீட்டுகளும், இ.இ.இ. பாடப்பிரிவில் 16 சீட்டுகளும் இ.சி.இ. பாடப்பிரிவில் 48 சீட்டுகளும் கம்ப்யூட்டர் பாடப்பிரிவில் 46 சீட்டுகளும் காலியாக உள்ளதால், நாளை செவ்வாய் கிழமை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

அ ர சு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் அதன் நகல்கள் 3 புகைப்படம் மற்றும் வளர்ச்சி கட்டணம் ரூ. 2352 ஆகியவை எடுத்து கொண்டு கல்லூரிக்கு நேரில் வந்து தங்களுக்கு விருப்பமான பாட பிரிவினை தேர்ந்தெடுத்து கல்லூரியில் பயிலலாம்.

மேலும் கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும். MBC/ BC மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது. இன்னும் ஏராளமான சலுகைகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது என்பதை தாங்களே படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு முதல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடதிட்டங்கள் நான் முதல்வன் பாடதிட்டங்கள் ஆகியவை நடைபெறும். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு மாத கால தொழிற்சாலைக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்படுகிறது . இதற்குண்டான முழு செலவும் அரசே ஏற்க்கிறது. மூன்றாம் ஆண்டு படித்து முடித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story