மீஞ்சூர் தனியார் பள்ளி தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் உறுதி மொழி ஏற்பு
மீஞ்சூர் தனியார் பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் என்னால் முடியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களை பொறுத்தவரை அவர்கள் படித்து வரும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு என்பது முக்கியமான ஒரு கால கட்டமாகும். இந்த கால கட்டத்தில் அவர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்து தன்னம்பிக்கையுடன் படித்தால் தான் அவர்கள் நினைத்தது போல் லட்சியத்தை நிறைவேற்ற முடியும். இதற்காக இந்த கால கட்டத்தில் பள்ளிகள் மற்றும் பொது தலங்களிலும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் என்னால் முடியும் நிகழ்ச்சி நடைபெற்றது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டமின்றி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் என்னால் முடியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தனர்.
வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் ஆகியோர் தேர்வுகளை பயமின்றி சந்திப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர். தேர்வுகளை எதிர்கொள்ளவது தொடர்பான ஆலோசனைகளையும், பள்ளி கல்விக்கு பிறகு உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அப்போது மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மாணவர்களுக்கு இருந்தால் எளிதில் எந்த தேர்விலும் வெற்றி பெற்று மாணவர்கள் தாங்கள் விரும்பிய பட்டப்படிப்பை எளிதில் படிக்க உதவும் எனவும் என கல்வியாளர்கள் ஆலோசனைகளை வழங்கினர். மாணவர்களும் எப்போதும் தன்னம்பிக்கையை கைவிட வேண்டாம் எனவும் தன்னம்பிக்கை தொடர்பான உளவியல் ரீதியான பயிற்சிகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். தொடர்ந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu