திருவள்ளூரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!

திருவள்ளூரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!
X

விழிப்புணர்வு பேரணியை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தொடங்கி வைத்தார்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையெட்டி பள்ளி மாணவ மாணவியர்கள் ஆட்சியர் அலுவலகம் முதல் காமராஜர் சிலை வரை விழிப்புணர்வு பேரணியை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 28-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


இந்த ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் துவங்கி பெருந்தலைவர் காமராஜர் சிலை வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி எஸ்பி ராமச்சந்திர மூர்த்தி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது திருவள்ளூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் சிலை அருகே நிறைவு பெற்றது.

இந்த பேரணியில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தமிழரசி, மாலா, மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself