திருவள்ளூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட போது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் 34 லட்சத்து 58 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4, லட்சத்து 74 ஆயிரத்து 744 பேர் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 34 லட்சத்து 58 ஆயிரத்து 524 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 17 லட்சத்து 5 ஆயிரத்து 287 பேரும், பெண்கள் 17 லட்சத்து 52 ஆயிரத்து 462 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 775 பேரும் உள்ளனர்.
இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (கோட்டாட்சியர் அலுவலகம்), உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட உள்ளது. இந்தப் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியில் பங்கேற்கலாம். புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அதற்கான படிவங்களை வழங்கி பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
மேலும் அக்.29ஆம் தேதி தொடங்கி டிச.28ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நவ.16, 11, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவும் உள்ளன. இந்த முகாம்களிலும் பொதுமக்கள் படிவங்களை வழங்கி திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் . கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 875 பெண் வாக்காளர்கள் 1, லட்சத்து 42 ஆயிரத்து 269 வாக்காளர்களும், 44 மாற்று பாலினத்தவர்கள் என மெத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 188 பேர் உள்ளனர்.
பொன்னேரி தனி தொகுதியில் 1 லட்சத்து 28ஆயிரத்து 101 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 547 பெண் வாக்காளர்கள், மாற்று பாலினத்தவர்கள் 32 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 680 வாக்காளர்கள். திருத்தணி தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 046 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 093 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 31 பேர் உட்பட மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 170 வாக்காளர்கள்.
திருவள்ளூர் தொகுதியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 527 வாக்காளர்கள், 1 லட்சத்து 36 ஆயிரத்து 086 பெண் வாக்காளர்கள், மாற்று பாலினத்தவர்கள் 34 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 647 வாக்காளர்கள் உள்ளனர். பூந்தமல்லி தனி தொகுதியில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 613 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 93 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 76 பேர் உட்பட மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 407 வாக்காளர்களும் ஆவடி தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 927 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 29 ஆயிரத்து 188 பெண் வாக்காளர்களும், 93 மாற்று பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 208 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரவாயல் தொகுதியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 208 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 598 பெண் வாக்காளர்களும், 119 மாற்று பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 925 வாக்காளர்கள். அம்பத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 219 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 740 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 81 பேர் உள்பட 3 லட்சத்து 60 ஆயிரத்து 040 வாக்காளர்கள் இருக்கிறார்கள். மாதவரம் தொகுதியில 2 லட்சத்து 35 ஆயிரத்து 184 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 39 ஆயிரத்து 444 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 116 பேர் உள்பட மொத்தம் 4 லட்சத்து 74 ஆயிரத்து 744 வாக்காளர்களும் உள்ளனர்.
திருவெற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 587 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 41 ஆயிரத்து 779 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 149 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 515 வாக்காளர்கள் என மொத்தம் 34 லட்சத்து 58 ஆயிரத்து 524 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu