திருவள்ளூர் அருகே சவுடு மண் ஏற்றி வந்த லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு
லாரி மோதி உயிரிழந்த இளைஞர் வினோத்குமார்.
திருவள்ளூர் அருகே சவுடுமண் லாரி மோதி இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் சாலையில் அமர்ந்து உடலை கட்டி பிடித்து கதறி அழுதனர்.
திருவள்ளூர் அடுத்த சிட்டத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வினோத்குமார் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது. இவருடைய மனைவி பெயர் அனுசியா,
வினோத்குமார் சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நிலையில் வழக்கம்போல் வினோத்குமார் சிட்டத்தூர் பகுதியில் இருந்து செவ்வாய்ப்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் பகுதியில் இருந்து சவுடு மண் ஏற்றி வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் வினோத்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த தண்டலம் கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்தனர். இருப்பினும் லாரி ஓட்டுநர் தப்பிச்சென்ற நிலையில்.உறவினர்கள் உயிரிழந்த வினோத்குமாரின் உடலைக் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி காண்போரின் கண் கலங்க வைத்தன,
மேலும் வினோத்குமாரின் உயிரிழப்புக்கு குவாரி உரிமையாளர்கள் உரிய பதில் சொல்லும் வரை வினோத்குமாரின் உடலை சாலையில் இருந்து எடுக்க விடமாட்டோம் என அவரது உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும்போது லாரிகள் செல்லும் பாதையை மக்கள் அதிகம் பயன்படுத்தாத பாதையாக பார்த்து அனுமதி வழங்க வேண்டும் எனவும் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுபவர்கள் மேலும் லாரிகளை அதிக வேகத்துடன் இயக்குபவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாப்பேட்டை காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இறந்து போன வினோத் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu