பதினொரு கார்களின் கண்ணாடி உடைப்பு சென்னையில் பரபரப்பு

பதினொரு கார்களின் கண்ணாடி உடைப்பு  சென்னையில் பரபரப்பு
X

சென்னை புழல் பகுதியில் 11 கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த புழல் சக்திவேல் நகர் 35-வது தெருவில் வீட்டுவாசலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களும், அதேபோல் லட்சுமி அம்மன் கோயில் தெரு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களும், காந்தி பிரதான சாலையில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் முன் பக்கம் பின் பக்கம் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த கார்களின் உரிமையாளர்கள் புழல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் காவல் துறையினர் விரைந்து வந்து அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சைக்கோ ஆசாமிகள் வேலையா அல்லது வேறு யாராவது மர்ம ஆசாமிகளா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் 11 கார் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்