ஆரணியில் குட்கா விற்ற இருவர் கைது!

ஆரணியில் குட்கா விற்ற இருவர் கைது!
X

.பெரியபாளையம் அருகே ஆரணியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆரணியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து 30 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

.பெரியபாளையம் அருகே ஆரணியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம், ஆரணியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெறுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாணத்துக்கு தொடர்ந்து வந்த புகாரை அடுத்து, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் உத்தரவின் பேரில், பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் ஆரணி போலீசார் ஆரணி பஜார் பகுதியில் உள்ள மல்லிகை கடைகள், பேருந்து நிறுத்தவும் அருகில் உள்ள பெட்டி கடைகள் என அனைத்து பகுதிகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டார்.

இதனை அடுத்து தூட்டா தெருவில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தெரியவந்தது. அதன் பேரில் விஜயன்(67), இளவரசன்(37). ஆகிய இருவரை கைது செய்து அவர்கள் மதிக்க வைத்து விற்பனை செய்த சுமார் ௩௦ கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குட்கா பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்து, விற்பனை செய்து வருகிறார் என்ற பல்வேறு கோணங்களில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil