மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவன் போலீசில் சரண்

மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவன் போலீசில் சரண்
X

காவல் நிலையத்தில் சரணடைந்த டில்லி

ஆம்பூர் அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த  கணவன்

ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி (வயது 46) இவரது மனைவி லட்சுமியுடன் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 52) என்பவருடன் லட்சுமிக்கு திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்துள்ளார்

இதனால் பல முறை இருவரையும் கண்டித்துள்ளார் டில்லி. ஆனால் அதையும் மீறி உறவு வைத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த டில்லி, கத்தியை எடுத்துகொண்டு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று அங்கு அமர்ந்திருந்த கோவிந்தசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளார்

ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த கோவிந்தசாமியை உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்த நிலையில், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் டில்லி சரணடைந்தார். இதுகுறித்து ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்

ஆம்பூர் அருகே மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
திருப்பத்தூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு
வனப் பகுதியில் கனிமவள கொள்ளை: 5 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
ஆம்பூரில் வயிற்று வலியுடன் வந்த நோயாளியை அலைக்கழித்த அரசு மருத்துவர்
ஆம்பூரில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
ஆம்பூர் அருகே ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
Salem Rowdy
ஆம்பூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்த சாரைப் பாம்பு
ஆம்பூர் அருகே ஆடு திருடிய சிறுவனுக்கு தர்ம அடி
ஆம்பூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
ஆம்பூரில் 18ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ai in future agriculture