ஆம்பூர் அருகே ஆடு திருடிய சிறுவனுக்கு தர்ம அடி

ஆம்பூர் அருகே ஆடு திருடிய சிறுவனுக்கு தர்ம அடி
X
ஆம்பூர் அருகே ஆடு திருடிய சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள நரியம்பட்டு கிராமத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆடு திருட்டு நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்காமல், அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஆடு கத்தும் சத்தம் கேட்டது. அப்போது பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது சிறுவன் ஆட்டை திருடி செல்ல முயன்றான். உடனே பொதுமக்கள் அவனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

மேலும் சிறுவனை உமராபாத் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூரில் பைக் திருடிய வாலிபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா போலீசார் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் 3 பேர் 2 பைக்குகளில் வந்தனர். போலீசார் அவர்க ளை மடக்கினார். இதனைப் பார்த்த பைக்கில் வந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மற்றொரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் வாணியம்பாடியை சேர்ந்த விஷால் (வயது 18) என்பதும், இவர் காட்பாடி பகுதியில் இருந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து 2 பைக்குகளை திருடி வந்ததும் தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!