ஆம்பூரில் 18ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
பைல் படம்.
ஆம்பூரில் 18ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு கருத்துரை பெறப்பட்டது.
அதனடிப்படையில் திருப்பத்துார் மாவட்டத்திற்கு மூன்று சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. அவ்வரசாணையின்படி முதலாவதாக 12.08.2023 அன்று பொதிகை பொறியியல் கல்லூரி ஆதியூரில் நடைபெற்றது.
இரண்டாவதாக 07.10.2023 அன்று திருப்பத்தூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. திருப்பத்துார் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூன்றாவதாக, இந்து மேல்நிலை பள்ளி ஆம்பூரில் (18.11.2023) நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் 300க்கும், மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எட்டாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் சார்ந்த (Diploma & ITI) முடித்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu