திருப்பத்தூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு

திருப்பத்தூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு
X

பைல் படம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இது குறித்து ஆம்பூா் வனச் சரக அலுவலரும், பறவைகள் கணக்கெடுக்கும் பணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எம்.பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு வனத் துறை மூலம் தமிழகம் முழுவதும் ஜன. 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்களில் ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதேபோல் திருப்பத்தூா் மாவட்டத்தில் 25 இடங்களில் நடைபெற்றது.

அதில், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் இருந்து வலசை வரும் ஸ்டில்ட், நெடுங்கால் உள்ளான், சேன் பைப்பா் மற்றும் அடா்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும் அரசவால் நீா்பிடிப்பான் உள்ளிட்ட 208 வகையான 2,467 எண்ணிக்கை கொண்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன.

முன்னதாக, விண்ணமங்கலம் ஏரி, செட்டேரி அணையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில், திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் நாகா சதீஷ் கிடிஜாலா, உதவி வனப் பாதுகாவலா் ராதாகிருஷ்ணன், இயற்கை ஆா்வலா் ஆற்றல்.பிரவீன் குமாா், விஐடி விலங்கியல் துறை பேராசிரியா் ரவிக்குமாா், தொண்டு நிறுவன நிா்வாகி அருள் ஆனந்தராஜ், வோ்கள் அறக்கட்டளை வடிவேல், கேஏஆா் பாலிடெக்னிக் தன்னாா்வ மாணவா்கள் மற்றும் வனத் துறையினா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் அருகே இலவச மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் அருகே பனங்காட்டூா் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்தாத் அறக்கட்டளை சாா்பாக நடந்த மருத்துவ முகாமை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

ஆம்பூரில் புகழ்பெற்ற யாஷ்ஃபீன் ஜெனரல் மற்றும் யுனானி கிளினிக் மருத்துவர் எம். சுஹைல் அகமது நோயாளிகளை பரிசோதித்தார். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பி. காா்த்திக், ஆ. காா்த்திக் ஜவஹா், அறக்கட்டளை நிா்வாகிகள் முஹம்மத் சலாவுதீன், நாஜிம் அஹமத், இஹ்திஷாமுல்ஹக், நபில் அஹமத், கைலாசகிரி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அரவிந்தந் ஆகியோா் கலந்து கொண்டனா். முகாமில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது