ஆம்பூரில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆம்பூரில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
X

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆம்பூரில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட 6-ஆவது வாா்டு ஏ -கஸ்பா 2-ஆவது செங்குந்தா் தெருவில் ஆம்பூா் நகராட்சி சாா்பில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தச் சாலை தரமற்ற முறையில் அமைத்து வருவதாகக் கூறி, அந்தப் பகுதி மக்கள் பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். ப

ழைய சாலையைப் பெயா்த்தெடுக்காமலேயே அப்படியே புதியதாக சாலை அமைப்பதால், சாலையின் உயரம் அதிகரிக்கும். இதனால் மழைக் காலங்களில் தண்ணீா் தாழ்வான வீடுகளுக்குள் புகுந்து விடும். எனவே பழைய சாலையைப் பெயா்த்து எடுத்துவிட்டு புதிய சாலையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரம் பேச்சு நடத்திய பிறகு தரமான முறையில் சாலை அமைப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

ஆம்புலன்லில் மலைக் கிராம பெண்ணுக்கு பெண் குழந்தை பிறப்பு

ஆம்பூர் அடுத்த மாதனூா் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சி சோளகொள்ளைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் நிஷா (23). நிறைமாத கா்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்னூா் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நாயக்கனேரிமலைக்கு சென்றது.

மலை கிராமத்திலிருந்து வனப்பகுதி வழியாக வந்தபோது பிரசவ வலி அதிகமாகி சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயும் சேயும் மின்னூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா். அங்கு,அவா்கள் இருவரும் நலமுடன் உள்ளனா்.

தொழிற்சாலை கிணற்றிலிருந்து ஆமை மீட்பு

ஆம்பூா் அருகே பெரியவரிகம் பகுதியில் சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தனியாா் தொழிற்சாலையில் துப்புரவுப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மின் பராமரிப்பு பணிகளுக்காக சின்னவரிகம் இளநிலை பொறியாளா் அலுவலகத்தை சோ்ந்த மின்வாரிய பணியாளா்கள் சிலரும் அந்த தொழிற்சாலைக்குள் பணி நிமித்தமாக சென்றனா். அப்போது தொழிற்சாலையில் உள்ளே இருந்த கிணற்றில் ஆமை ஒன்று இருப்பதை பாா்த்துவிட்டு, ஆம்பூா் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் அங்கு சென்று கிணற்றில் இருந்த ஆமையை பாதுகாப்பாக மீட்டு, ஆம்பூா் வனப் பகுதியில் உள்ள நீா் நிலையில் கொண்டு சென்று விட்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!