உப்புசத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் நகர் நல சங்க நிர்வாகிகள் மலரஞ்சலி
உப்பு சத்தியாகிரக ஸ்தூபியில் நடந்த நிகழ்ச்சியில் கையேடு வெளியிடப்பட்டது.
திருச்சி சுந்தரராஜ்நகர், காவிரி நகர், ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நல சங்கம் சார்பாக ஜங்ஷனில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் ஸ்தூபியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடக்க நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினர்.
நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் திரளாக கலந்துகொண்டு நினைவு ஸ்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி பாதயாத்திரையில் கலந்துகொண்ட ராஜாஜி தலைமையிலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவ படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் உப்பு சத்தியாக்கிரக சிறப்புகள் பற்றியும் அந்தப் போராட்டம் நாடு முழுவதும் ஏற்படுத்திய எழுச்சியை பற்றியும் நினைவு கூறப்பட்டது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் விதமாக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அவ்வமயம் முன்னாள் துணை கலெக்டர் எஸ். ஆர். சத்தியவாகீஸ்வரன் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் சிறு குறிப்பு என்ற தொகுப்பினை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ராஜீவ் காந்தி டிரஸ்ட் செயலாளர்டாக்டர் ஞானவேல், மற்றும் , வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைமுன்னாள் இணை இயக்குனர் என். பி. ஹரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நகர் நல சங்க செயலாளர் செந்தில்குமார்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் நசீர் அஹமத், முன்னாள் துணை ஆட்சியர்சாகுல் ஹமீத், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வந்திருந்த அனைவரும் டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் பங்களாவில் காந்தியடிகள் தங்கியிருந்த அறையை பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu