ஆசிரியர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

ஆசிரியர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
X
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் மனு அளித்த ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர்.
திருச்சியி் நடைபெற்ற ஆசிரியர்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

இன்று 26.10.2024 சனிக்கிழமை திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஏற்பாட்டில் மரக்கடை சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கல்வி மாவட்டம் சார்பாக அரசுப் பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என 5 அறைகள் ஒதுக்கீடு செய்து கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கோரிக்கைகள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குறைதீர் கூட்டத்தை 5 மாவட்டக்கல்வி அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகப் பொறுப்பாளர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அனுவித்து ஆசிரியர்கள் கடந்த 4.10.2024 அன்று நடைபெற்ற சிறப்பு நிலை உதவித்தொகை முகாம் சுமார் 190 ஆசிரியர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு, இன்று குறைதீர் கூட்டம் நடத்துவதற்கு ஆசிரியர்களின் சார்பாக நன்றி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில்

1. 5 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் நலன்கருதி ஒரு ஆசிரியரையாவது மாற்றுப்பணியில் நியமிக்க வேண்டும். அந்த பள்ளியில் இருந்து எந்த ஒரு ஆசிரியரையும் பிற பணிகளுக்கு மாற்றும் பணியில் அனுப்பிட ஆணை வழங்கக் கூடாது.

2. திருச்சி கல்வி மாவட்டத்தில் திருச்சியில் இரண்டு, மணப்பாறையில் ஒன்று மட்டுமே உள்ள வினாத்தாள் காப்பு மையத்தை திருச்சியில் நான்கு, மணப்பாறையில் இரண்டு என அதிகரிக்க தேர்வுத்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்3. மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு விலையில்லாப் பொருட்கள் திருச்சியில் இருந்து வழங்கப்படுவதற்கு பதிலாக மணப்பாறையில் இருந்து வழங்கினால் சிரமமின்றி பள்ளிகளுக்குச் செல்ல ஏதுவாக இருக்கும்.4. திருச்சியில் குடியிருந்து கொண்டு மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி ஒன்றியங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, ​​மணப்பாறையில் கலந்து கொள்வதற்கு பதிலாக திருச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கைகளை வழங்கினோம்.

ஏற்கனவே எங்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2010, 2011,2012ல் பணிமருத்துவப்பட்டு டெட் பிரச்சினையால் சம்பளம் மட்டுமே பெற்று, ஆண்டு ஊதிய உயர்வு வழங்காதது குறித்து, 2019, 2020, 2022 ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தியதையும் நிறுத்தப்பட்ட ஆண்டு உயர்வை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவைக் கோருகிறோம். .

எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தாங்களும் குறிப்பெடுத்துக் கொண்டு, நேர்முக உதவியாளரிடம் பதிவு செய்து பரிசீலிப்பதாகக் கூறினார்.

இந்நிகழ்வில் மாநில சட்ட ஆலோசகர் நேதாஜி, மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட செயலாளர் உதுமான் அலி, மகளீரணித்தலைலி ஜெயலட்சுமி, செந்தில் வடிவு, மாவட்ட துணை தலைவர் சுப்ரமணி, துணை செயலாளர் இளம்பருதி, லால்குடி கல்வி மாவட்டத்தலைவர் பூபாலன் மற்றும் இராயர், நிகார் யாசீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்களின் குறைதீர் கூட்டத்தில் நேரடியாக முதன்மை கல்வி அலுவலர் சார்ந்த ஆசிரியர்களிடம் கனிவுடன் கோரிக்கைகளை கேட்டறிந்தது ஆசிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு மாதம் ஒரு முறையாவது குறைதீர் கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்களுக்கு பள்ளி அளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டால் ஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் பணியினை மனநிறைவுடன் சிறப்பாக செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்று நடைபெற்ற ஆசிரியர் குறைதீர் கூட்டத்தில்,மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேர்வதற்கான ஆணை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் கடிதத்தை அனுப்பிவிட்டு, உண்மைநகல் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்று கூறி உண்மை நகல் பெற்று வருமாறு தலைமையாசிரியர் வற்புறுத்தி வந்த நிலையில் 3 மாதகாலமாக கடிதம் பெறமுடியாமல் மன உழைச்சலில் இருந்த ஆசிரியைக்கு, மனு அளித்த உடனேயே அவருக்கு ஆணை நகல் வழங்கப்பட்டது. உண்மை நகலைப் பெற்றுக் கொண்ட ஆசிரியை மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆசிரியர் குறைதீர் கூட்டம் ஏற்பாடு செய்து ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself