தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை

தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேவர் உருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

தேசம், தெய்வீகம் எனது இரண்டு கண்கள் என முழங்கியவர் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். நாட்டின் விடுதலைக்காக போராடிய அவரை பிரிட்டீஷ் அரசு சிறையில் அடைத்த போது கூட சிறைச்சாலையில் இருந்தபடியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி நாடாளுமன்றத்தில் முழங்கியவர் முத்துராமலிங்க தேவர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 146வது பிறந்த நாள் குருபூஜை விழா இன்று பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேவருக்கு மரியாதை செய்தார். மேலும் மதுரை கோரிமேட்டில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதே போல் தமிழகம் முழுவதும் இன்று தேவர் சிலை உள்ள இடங்களில் எல்லாம் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன், முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயம் க.ஸ்ரீதர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், பொருளாளர் சேவியர்,மீனவர் அணி கண்ணதாசன், அறிவழகன் விஜய், பேரவை ஐயம்பாளையம் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ்,அறிவழகன், ஒன்றிய செயலாளர் எஸ் பி முத்துக் கருப்பன், வண்ணாங் கோவில் முத்துக்குமார்,சமயபுரம் ராமு, திருநாவுக்கரசு, வக்கீல் வெங்கடேசன், தேவா, புங்கனூர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
எல்லாமே மாறப்போகுது.. ஒரே கிளிக்கில் Super App...! ரயில் பயணிகளே!
அமெரிக்க தேர்தல் 2024: அனைத்து ஸ்விங் மாநிலங்களிலும் டொனால்ட் டிரம்ப் முன்னிலை
தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை
தென்காசி பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான கடையை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு
திமுக-வை சீண்டிய விஜய் அதிமுக-வை தொடாதது ஏன்? என்னமோ இருக்கு..!?
விஜய்-ன் வீர வசனங்கள் :  பா.ஜ.க., கடும் கண்டனம்..!
தமிழக அரசியல் களத்தில்  விஜய் வீசிய அணுகுண்டு..!
ஆட்சியாளர்கள் கரை  வேட்டி கட்டலாமா? மக்களே சொல்லுங்க..!
அந்தியூர் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திருப்பூர் எம்பி
அமித்ஷாவுடன் உமர் சந்திப்பு: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியுடன் மோதும் முன்னாள் கவுன்சிலர்
ஜேபிசி கூட்டத்தில் கண்ணாடி பாட்டிலை உடைத்த திரிணாமுல் எம்பி சஸ்பெண்ட்
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி