பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியி்ல் நடத்தப்பட்டது.

திருச்சியில் தீபாவளி திருநாளை மத்திய அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் பேருந்து நிலையம், சோனா மீனா திரையரங்கம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோரிடம் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வைக்க வேண்டும். எப்படி கவனமாக இருக்க வேண்டும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள வெடிகளை வெடிக்க வேண்டும் என்று தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக யாரை தொடர்பு கொள்ள வேண்டும் முதலுதவிக்கு யாரை அனுக வேண்டும் போன்ற பல்வேறு தகவல்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஆர்.கோவிந்தராஜ் தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பின் தலைவரும் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான சிவசங்கர் சேகரன், அறிஞர் அண்ணா சிட்டிசன் ரைட்ஸ் லீகல் புரொடக்சன் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை சமூக ஆர்வலரும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரகருமான சீனிவாச பிரசாத், சமூக ஆர்வலர் கோவிந்தசாமி,


சமூக ஆர்வலர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி, பெட்காட் அமைப்பின் திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், டேனியல்,ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் தலைவர் சங்கர் ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் மோகன்ராம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் தலைவர் யோகா விஜயகுமார், சக்சலோ தொண்டு நிறுவனத்தின் தலைவர் யோகா, தாய் நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹப்சி சத்தியராக்கினி நிர்வாகி சுதா, தின சேவை அறக்கட்டளையின் தலைவர் சிவ பிரகாசம், தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் நிர்வாகி கண்ணன், தேசிய மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் ,விளையாட்டு பிரிவு செயலாளரும், தடகள பயிற்சியாளருமான சுரேஷ் பாபு ,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பேருந்து பயணிகள் மாணவ மாணவியர்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!