பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பயணம் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடத்தப்பட்டது.

திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மாணவ மாணவிகள் சிறுவர்கள் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள திருச்சி மாவட்ட தீ தடுப்பு மீட்பு பணி நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது.


இப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளை கடந்து தனி நபர் பொதுநல சேவையாளர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான டாக்டர் D.S.P என்கிற D. சீனிவாச பிரசாத் தொடர்ந்து செய்து வருகிறார். இன்று திருச்சி மாவட்டத்தில் தனது 2 சக்கர விழிப்புணர்வு வாகன பயணத்தை தொடங்கி குளித்தலை, கரூர், வெள்ளக் கோயில், காங்கேயம் வழியாக திருப்பூர் சென்று மீண்டும் சாலை வழியாக திருச்சி வந்தடைந்து தனது விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்கிறார்.


இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ். என். மோகன் ராம், ஒயிட் ரோஸ் பொது நல சங்கத்தின் தலைவர் டாக்டர் பி சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், மூத்த சமூக செயற்பாட்டாளர் கோவிந்தசாமி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் யோகா விஜயகுமார், இளையோர் மையத்தின் நிர்வாகியும் கவிஞருமான சங்கமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாவட்ட தீ தடுப்பு மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் கி. சுரேஷ் சிறப்பு நிலைய அலுவலர் ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் தேசிய மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீ தடுப்பு, சாலை விபத்து இல்லாத பாதுகாப்பான தீபாவளி இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் திரளான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்