பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பையில் திருமண அழைப்பிதழ்

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பையில் திருமண அழைப்பிதழ்
X

துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பையில் திருமண அழைப்பிதழ் அச்சிடும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கடல்வாழ் உயிரினங்கள், மற்றும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது.

இருப்பினும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். திருச்சியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவதை வலியுறுத்தி நூதன முறையில் திருமண அழைப்பிதழை துணிப்பையில் அச்சிட்டு வருகின்றனர்.

அடுத்த தலைமுறை காக்க பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவோம் , இயற்கை வளத்தை காப்போம் என திருமண அழைப்பிதழ் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வீடு தோறும் கொடுத்தால் திருமண நாள் அன்று குப்பைத்தொட்டியில் தான் இருக்கும், ஆனால் இதுபோல துணிப்பை கொடுத்தால் பல வருடங்கள் எல்லோரது வீட்டிலும் நினைவாக, பயனாகவும் இருக்கும்.

இந்த மணமக்களை வாழ்த்துவதோடு, நூதன முறையில் துணிப்பையில் திருமண அழைப்பிதழ் அச்சுட்டு வழங்கும் குடும்பத்தாரையும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.

திருமண தாம்பூல பைகள் ஒரு காலத்தல் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து வந்தது. பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணலர்வு பிரச்சாரத்தின் பலனாக தற்போது திருமண தாம்பூல பைகள் பெரும்பாலும் துணிப்பைகளாக மாறி விட்டன. இதற்கு முத்தாய்ப்பாக தற்போது திருமண அழைப்பிதழும் துணிப்பைகளில் அச்சிடப்படும் கலாச்சாரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!