திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ரயில் சேவையில் மாற்றம்
X
பைல் படம்.
திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை உள்ள இருப்புப்பாதை புதுப்பிக்கும் பணி இன்று 22-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியானது அடுத்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதையொட்டி இன்று (22ம் தேதி), 27, 29-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 3 மற்றும் 5-ஆம் தேதி ஆகிய நாட்களில் பாலக்காடு விரைவு ரயில் கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும். திருச்சி ரயில்வே ஜங்ஷனில் விரைவு ரயில் வராது என்ற தகவலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story