உறையூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பெண்கள் முற்றுகை
திருச்சி உறையூர் பகுதியில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை பாேராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருச்சி உறையூர் பகுதியில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக வருகின்ற முக்கியமான பகுதியாகும். இந்த இடத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள சமூக சேவகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் உறையூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கடைக்கு முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக புதிய கடையை மூட வேண்டும் இல்லை என்றால் அந்த கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போலீசார், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu