திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது- போலீசார் நடவடிக்கை

திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது- போலீசார் நடவடிக்கை
X
திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடம் இருந்து, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, திருச்சி தில்லை நகர், கண்டோன்மென்ட், மத்திய பஸ் நிலையம், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சோமரசம்பேட்டையை சேர்ந்த பார்த்திபன், உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த பிரகாஷ் குமார், அல்லி துறையைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள், ஐந்து இடங்களில் 5 பேரிடம் மிரட்டி செல்போன்களை பறித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் கைவரிசை காட்டி உள்ளளார்களா என்பது குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
திருச்சி சுந்தர்ராஜ் நகரில் கொண்டாடப்பட்ட பல்சமய நல்லுறவு தீபாவளி திருவிழா
சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறை மற்றும் அபராதம்
பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பையில் திருமண அழைப்பிதழ்
கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி ஏடியுசி சார்பில் பதிவு தபால்
திருச்சி அருகே  அதிமுக வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள்: மேயர் அன்பழகன் ஆய்வு
திருச்சி மாநகராட்சி பகுதியில் அக். 18ம்தேதி குடிநீர் வினியோகம் ரத்து
ai in future agriculture