தஞ்சாவூர் மாவட்ட மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட மருத்துவமனைகளை சுகாதாரத்துறை  அமைச்சர் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் மருத்துவமனைகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி கொரோனா சிகிச்சை மையம், வல்லம் சிகிச்சை மையம், தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மற்றும் இராசமிராசுதார் மருத்துவமனையில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அங்கு தயார் நிலையில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.த

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 300 ஆக்சிசன் படுக்கைகளை ஆய்வு செய்தார், பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருப்பு பூஞ்சையினால் நோயினால் பாதிக்கப்பட்ட 15 பேர் குணமடைந்த இன்று வீடு திரும்பிய அவர்களை அமைச்சர் வழியனப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

மூன்றாவது அலை குழந்தைகள் தாக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை, அது யூகத்தின் அடிப்படையில் வந்த தகவல் ஒன்று தான். இருந்தாலும் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு என்று சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தமிழகம் முழுவதும் 70,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ஊசிகள் வந்ததாகவும், அதில் ஒரு கோடியே ஒரு கோடியே 5 லட்சம் ஊசிகள் நேற்று வரை போடப்பட்டுள்ளாதாகவும், இன்று மட்டும் 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன, அவைகளை மாவட்டத்திற்கு பிரித்து அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

தமிழகத்தில் நேற்று வரை மற்றும் 1,736 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், தொடர்ந்து வீடு திரும்பி வருகின்றனர் என தெரிவித்தார். ஆய்வின் போது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிக்குமார் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story