தூர்வாரும் பணிகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

தூர்வாரும் பணிகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூர் வாரும் பணிகள் குறித்து விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம நடைபெற்றது.

தூர்வாரும் பணிகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என அரசுக்கு தஞ்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணி கண்காணிப்பாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும், குழுவில் விவசாயிகளை உறுப்பினராக இணைக்க என கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு தெரிவித்துள்ள பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாவட்டத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளில் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், உடனடியாக ஜூன் 12 தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story