மாநகராட்சி இடத்தில் கடைகள் வைத்திருக்கும், வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு

மாநகராட்சி இடத்தில் கடைகள் வைத்திருக்கும், வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு

பைல்படம்

மாநகராட்சி குறைந்த வாடகை அடிப்படையில் நிர்ணயம் செய்து எங்களுக்கு கடைகளை தொடர்ந்து நடத்திட அனுமதிக்க வேண்டும்

மாநகராட்சி இடத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தஞ்சை பகுதியில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தஞ்சை அண்ணா சிலை அருகே இருந்த பர்மா பஜார் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதில் தஞ்சை வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே 16 கடைகள் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது.

இந்த இடத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு பொது இடங்களில் ஆக்கிரமிப்பு சட்ட விதிகளின்படி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அங்கு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் 8 க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். இதில் வியாபாரிகள் கடை வைத்திருக்கும் இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எங்களுக்கு கிடையாது, எனவே அந்த இடத்தில் மாநகராட்சி குறைந்த வாடகை அடிப்படையில் நிர்ணயம் செய்து எங்களுக்கு கடைகளை தொடர்ந்து நடத்திட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story