சிவகங்கை எஸ்பி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி இளம்பெண் தற்கொலை முயற்சி

சிவகங்கை எஸ்பி  அலுவலகம் முன்பு  மண்ணெண்ணெய் ஊற்றி   இளம்பெண் தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தற்கொலைக்கு  முயன்ற பெண்ணை மீட்ட போலீஸார்

கோகிலாவின் தந்தை ஆறுமுகம் தனது வீட்டைகோகிலாவுக்கு எழுதிவைத்ததால் அவரை அண்ணன் தாக்கிய வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லையாம்

சொத்துப் பிரச்சினை காரணமாக இளம்பெண் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இளமனூரைச் சேர்ந்தவர் கோகிலா. திருமணமான இவர்.தனது கணவர் ராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்று குழந்தைகளுடன் தனது தந்தை ஆறுமுகத்துடன் இளமனூரில் வசித்து வருகின்றார்.

இவரது நிலையை அறிந்த கோகிலாவின் தந்தை ஆறுமுகம் தனது வீட்டை கோகிலாவுக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கோகிலாவின் அண்ணன் காசிநாததுரை அவரது மனைவி மற்றும் மகன்களுடன் சேர்ந்து கோகிலாவை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து இளையான்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லாத நிலையில், தனது அண்ணன் காசிநாததுரைக்கு சாதகமாக இளையான்குடி காவல் நிலையத்தார் தன்னை அச்சுறுத்துவதாக கூறி, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

இதனைக்கண்ட அருகிலுள்ள காவலர்கள் தடுத்து நிறுத்தி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கோகிலாவை மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story