நீலகிரியில் மனுநீதி நாள் முகாம்: 59 பயனாளிகளுக்கு மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரியில் மனுநீதி நாள் முகாம்: 59 பயனாளிகளுக்கு மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
X

மாற்றுத்திறனாளி பயனாளருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் 

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ.25.53 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் அருணா வழங்கினார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கொடநாடு ஊராட்சிக்கு உள்பட்ட கெரடாமட்டம் பொன்னூா் பூங்காவில் ஆட்சியா்அருணா தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 6.07 லட்சம் கல்விக் கடனுதவி பெறுவதற்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 6.60 லட்சம் மதிப்பில் பயிர்க் கடனுதவி பெறுவதற்கான ஆணை, ஒரு பயனாளிக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பில் கால்நடை பராமரிப்புக்கான கடனுதவி, மாவட்ட சமூகநலத் துறை சார்பில் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்துக்கான வைப்புப் பத்திரங்கள் வழங்கப்பட்டது

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 13 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் காளான் வளா்ப்பிற்காக ஒரு பயனாளிக்கு ரூ. 8 லட்சம் கடனுதவி பெறுவதற்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு ரூ. 9,300 மதிப்பிலான விசைத் தெளிப்பான்கள் ஆகியவை வழங்கப்பட்டது

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ஜாதிச் சான்றிதழ்கள், 10 பயனாளிகளுக்கு முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.25 லட்சம் மதிப்பில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு பயனாளிக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் ரூ. 7,900 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.ஆயிரம் மதிப்பில் மருந்துப் பெட்டகங்கள், ஒரு 59 பயனாளிகளுக்கு ரூ.25.53 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் அருணா வழங்கினார்.

இந்த முகாமில் கோத்தகிரி பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்