108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி

108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி

நாமக்கல்லில் 108 ஆண்புலன்ஸ் பணியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

தமிழகத்தில் 1300க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரவு பகல் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்கள் பணியில் சேரும்போது சென்னை தலைமை அலுவலகத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

நாமக்கல்லில் மொத்தம் 27 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் பல்வேறு வகையான நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பல உயிர்களை காத்து, மக்களின் நம்பிக்கையை உறுதி செய்து வருகின்றனர். மேலும் இச்சேவை உயிர் காக்கும் சேவை என்பதால் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை நினைவூட்டல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் நடைபெற்ற, இந்த பயிற்சியில் விபத்தில் தலையில் அடிபட்ட நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, கை கால் முறிவு ஏற்பட்ட நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது. நெஞ்சுவலி நோயாளிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, ஃபிட்ஸ் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, விஷம் அருந்திய நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, கர்ப்பிணி பெண்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என பல்வேறு உதவி சிகிச்சைகளுக்கான செயல்முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி தலைமை வகித்தார். சென்னை தலைமை அலுவலக மனிதவளத்துறை அலுவலர் அனிதா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டு உயிர் காக்கும் பயிற்சியை மேற்கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story