கல்கி 2898 ஏடி - என்னென்ன தெரிஞ்சிக்கணும்? எல்லாம் இங்கே!

கல்கி 2898 ஏடி - என்னென்ன தெரிஞ்சிக்கணும்? எல்லாம் இங்கே!
X
கல்கி 2898 ஏடி - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் இங்கே!

ஆரம்பத்தில் project k என்று அழைக்கப்பட்டு வந்த படத்துக்கு பின்னாளில் kalki 2898 ad என்று பெயர் வைக்கப்பட்டது.

கல்கி நடிகர்கள் பட்டாளம் | cast of kalki 2898 ad

பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் இந்த படத்தில் ( kalki 2898 ad cast ) முக்கிய கதாபாத்திரங்களில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திரங்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உதவும் என்று கூறப்படுகிறது.


கல்கி ரிலீஸ் தேதி | kalki 2898 ad release date

ஆரம்பத்தில் கல்கி திரைப்படம் 2024ம் ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகும் ( kalki 2898 ad initial release ) என்று கூறப்பட்டது. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெலுங்கு சினிமாவுக்கு மிகப் பெரிய வெற்றி காத்திருப்பதாக கருதப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களுக்காக ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. கல்கி 2898 ஏடி படத்தின் ( kalki 2898 ad postponed ) அடுத்த ரிலீஸ் தேதியாக ஜூன் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ( kalki 2898 ad release date postponed ) ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதன் காரணமாக இந்திய அளவில் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ( kalki 2898 ad release date in india ) கல்கி 2898 ஏடி திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க ஒரே நேரத்திலேயே ரிலீஸ் ஆகின்றது.

கல்கி படத்தின் பட்ஜெட் | kalki 2898 ad budget

கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் பட்ஜெட் என்பது, இந்தியாவின் மிகப்பெரிய படங்களுக்கு தரப்படும் பட்ஜெட்களில் ஒன்றாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட பாதிக்கு மேலாக இப்போதே வசூல் பெற்றுவிட்டது. திரையரங்குக்கு முன்பாகவே மற்ற உரிமைகளை விற்றே இந்த பாதியை அவர்கள் பெற்றுவிட்டனர். மேலும் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்கிலும் சாதனைகளைப் படைத்து வருகிறது கல்கி 2898 ஏடி திரைப்படம்.


கல்கி விஎஃப்எக்ஸ் நிறுவனம் | kalki 2898 ad vfx company name

பிரைம் ஃபோகஸ் டிஎன்இஜி மற்றும் தி எம்பஸி விஷுவல் எஃபக்ட் ( Prime Focus DNEG and The Embassy Visual Effects ) ஆகிய நிறுவனங்கள்தான் இந்த படத்துக்கு விஷுவல் எஃபக்ட் பணிகளைச் செய்து கொடுத்தது.

கல்கி படத்தின் டிரைலர் | kalki 2898 ad trailer

கல்கி திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் ஜூன் 21 ஆம் தேதி ( kalki 2898 ad trailer release date ) அன்று வெளியானது. கல்கி டிரைலர் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கமல்ஹாசன் சுப்ரிம் யாஷ்கின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் அவரே பேசி நடித்திருக்கிறார்.

டிரைலரில் இடம் பெற்ற பல காட்சிகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது. இதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோரின் லுக் இந்தியா முழுக்க பேசப்பட்டது. இதில் கமல்ஹாசன் தோற்றம் மட்டும் மிகவும் வித்தியாசமாக காட்டப்பட்டிருந்தது. இந்த படத்தில் முக்கியமான நபரே யாஷ்கின் தான் அந்த கதாபாத்திரத்தை கமல்ஹாசன் ஏற்று நடித்திருக்கிறார்.


கமல்ஹாசனை இந்த வேடத்தில் நடிக்க வைக்க கிட்டத்தட்ட 1 ஒரு வருட காலம் காத்திருந்ததாம் படக்குழு. மிக தீவிரமாக ஆலோசித்து கடைசி நேரத்தில்தான் கமல்ஹாசன் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்த இந்த படத்தினை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாரிக்கிறார்கள். அதேநேரம் தமிழ், மலையாளம், கன்னடத்தில் இந்த படத்தை டப்பிங் செய்கிறார்கள். இந்த படத்தின் சில காட்சிகள் கசிந்துள்ளதாக ( kalki 2898 ad leak ) தகவல் பரவியது. ஆனால் அதில் பெரிய சுவாரஸ்யம் எதுவும் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

கல்கி என்பதன் பொருள் என்ன? | kalki 2898 ad means


கல்கி 2898 என்பதன் அர்த்தம் என்ன ( kalki 2898 ad meaning ) என்று புரியாமல் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இணையத்தில் தேடி வருகிறார்கள். கல்கி என்பதை யுகத்தை குறிக்கிறது. அந்த யுகம் இப்போதைய ஆண்டிலிருந்து 874 ஆண்டுகள் கழித்த ஒன்றாக இருக்கிறது. இதிகாசங்களில் வரும் கதையை அப்படியே சயின்ஸ் பிக்சன் கதையில் புகுத்தி ஒரு புதிய உலகத்தை படைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்த படத்தில் அமிதாப் பச்சன் ( kalki 2898 ad amitabh bachchan ) அஸ்வதமா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது மகாபாரதத்தில் இடம்பெற்ற ஒரு சிறப்பு வாய்ந்த கதாபாத்திரமாகும். கல்கி திரைப்படத்தின் கதைக்களமும் ( kalki 2898 ad plot ) இதைச் சுற்றியே பின்னப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனினும் படம் வெளியான பிறகுதான் இது குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

கல்கி திரைப்படத்தின் போஸ்டர்கள் ( kalki 2898 ad poster ) அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. டீசர் முதல் டிரைலர் வரை அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!